Home /News /tamil-nadu /

அரசு வேலைக்கு பணம்: எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது...

அரசு வேலைக்கு பணம்: எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது...

EPS Aide Mani

EPS Aide Mani

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக் கணக்கில் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்தது தொடர்பாக மணி மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 45). இவர் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியிடம் உதவியாளராக சில ஆண்டுகளாக இருந்து வந்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், மணி தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் 17 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும் மணிக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களையும் அவர் போலீசாரிடம் சமர்ப்பித்திருந்தார்.

தமிழ்ச்செல்வன் தவிர்த்து மேலும் சிலரும் உதவியாளர் மணி மீது போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக் கணக்கில் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்தது தொடர்பாக மணி மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மணி தலைமைமறைவாக இருந்து வந்தார்.

தலைமறைவாக இருந்த மணியை இன்று காலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Edappadi Palanisami, EPS

அடுத்த செய்தி