சட்டமன்ற தேர்தலில் கோட்டை விட்டாச்சு, ஆனால் உள்ளாட்சி தேர்தலில்... வியூகம் வகுத்த பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து முழுமையாக கவனம் செலுத்தி களப்பணி ஆற்ற எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளரிடம் அறிவுறுத்தி உள்ளார்.

  • Share this:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன்,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான, எடப்பாடி கே. பழனிச்சாமி , சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, பா.வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, சத்யா, அசோக்,விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், அவரது சொந்த ஊரில் இருப்பதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Also Read : செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் நிலை என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாவட்ட செயலாளர்களின் ஆலோசனையில் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட அதிமுகவில் பிடிக்கப்படாத நிலையில் அடுத்து வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து முழுமையாக கவனம் செலுத்தி களப்பணி ஆற்ற எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளரிடம் அறிவுறுத்தியதாகவும், மேலும் சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சசிகலா தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்களிடம் பேசிவருகிறார். சசிகலாவிடம் பேசும் அதிமுக நிர்வாகிகள் மீது தலைமை நடவடிக்கை எடுத்தாலும் தினம் ஒரு ஆடியோ வெளிவந்த வண்ணமே உள்ளன. மேலும், அந்த ஆடியோ விவரங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தினமும் ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

Also Read : குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அறக்கட்டளைக்கு 2 முறை மாநில அரசு விருது கொடுத்து கௌரவிப்பு

இந்த நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ய உள்ளார் என்ற தகவல் அறிந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ’கழகமும் நீங்களே..! எங்கள் காப்பாகமும் நீங்ககளே...!’ என்று அ.தி.மு.க அலுவலகத்தின் அருகே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டர்கள் அ.தி.மு.க தொண்டர்கள் கிழித்து எறிந்தனர். அதேபோல, மதுரை புறநகர் பகுதியிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: