Home /News /tamil-nadu /

சபாநாயகர் நடுநிலை இல்லாமல் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

சபாநாயகர் நடுநிலை இல்லாமல் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy | தமிழக சட்டப்பேரவை விவாதங்களின் போது சபாநாயகர் நடுநிலை இல்லாமல் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி சார்பில் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது, அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர், திருவிழா தொடர்பாக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை,  ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை. அரசியல் ஆக்கக்கூடாது. டெல்டா மாவட்டங்களில் இதுபோல் நடக்கிறது. இதற்கு முன்னரும் இதேபோல் பெரிய விபத்துகள் நடந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது தோழியும் கும்பகோணம் மகாமகத்தில் நீராட சென்று போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

    2014ம் ஆண்டு கும்பகோணம் விபத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து இதுபோல் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    மகாமகத்தின் போது ஏற்பட்ட விபத்து குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசிய விவரங்களை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்க கோரி அதிமுகவினர். தொடர்ச்சியாக கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர்.

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையில் பேச முற்பட்ட போது, வெளிநடப்பு செய்துவிட்டு பேச அனுமதி கேட்டால் கொடுக்க முடியாது என பேரவை தலைவர் அனுமதி மறுத்தார். அதனைத் தொடர்ந்து பேரவை உள்ளேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவையில் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் மூலம் வெளியேற்ற பேரவை தலைவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேரவை வளாகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பினர்.

    Also Read : செங்கல்பட்டு- தாம்பரம் போக்குவரத்து நெரிசல்: அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

    இதையடுத்து அதிமுகவை சட்டப்பேரவையில் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  அதிமுக இன்று வெளிநடப்பு செய்த பின் செல்வபெருந்தகை தேவையில்லாத கருத்தை சபையில் பதிவு செய்துள்ளார். திமுக தூண்டுதல் பேரில் செல்வப்பெருந்தகை தொடர்ந்து பேசி வருவதாக சந்தேகம் வருகிறது. முன்னாள் முதல்வர் பெயரை வேண்டுமென்றே செல்வப்பெருந்தகை கூறி வருகிறார்.

    சட்டசபையில் இதற்கு முன்பு என்னென்ன சம்பவம் நடந்தது என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். இப்போது நாங்கள் நாட்டு மக்கள் பிரச்சனையை கொண்டு வந்து பேசிகிறோம். சபாநாயகர் நடுநிலை இல்லாமல் செயல்படுவது வருத்தம் அளிக்கிறது என்றார்.

    இதனிடையே கனத்த இதயத்துடன் தான் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டதாக சபாநாயகர் அப்பாவு பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, DMK, Edappadi palanisamy, TN Assembly

    அடுத்த செய்தி