Home /News /tamil-nadu /

அதிமுக பொதுச்செயலாளர் ஆகும் எடப்பாடி பழனிசாமி.. கிடைக்கப்போகும் அதிகாரங்கள் என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகும் எடப்பாடி பழனிசாமி.. கிடைக்கப்போகும் அதிகாரங்கள் என்ன?

அதிமுக

அதிமுக

அதிமுகவின் சட்டதிட்ட விதி எண் 20ன் படி பொதுச்செயலாளர் என்பவர்,  அதிமுகவின் நிர்வாக ரீதியிலான அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார்

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள்,  அவரின் பணிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

அதிமுகவின் சட்டதிட்ட விதி எண் 20ன் படி பொதுச்செயலாளர் என்பவர்,  அதிமுகவின் நிர்வாக ரீதியிலான அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார்.  தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர்  தேர்ந்தெடுக்கப்படுவார்.

நிர்வாக வசதிக்காக பொது உறுப்பினர்களில் இருந்து ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட துணைப் பொதுச்செயலாளர்களையும், பத்துக்கும் மேற்படாது தலைமைக் கழக செயலாளர்களையும் நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு.  துணைப் பொதுச் செயலாளர்கள், அவைத்தலைவர், பொருளாளர், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நியமன உறுப்பினர்களை கொண்டு செயற்குழுவை பொதுச்செயலாளரால் மட்டுமே அமைக்க முடியும்.

செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுதல், பொதுக்குழுவும் செயற்குழுகும் அவ்வப்போது முடிவெடுக்கும் திட்டங்களையும் தீர்மானங்களையும் செயல்படுத்துவது, உட்கட்சி தேர்தலை நடத்துதல், வரவு செலவு கணக்கை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்.  அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறாக நடக்கும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு: வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடு.. பேனர்களில் ஓபிஎஸ் படம் தவிர்ப்பு

பொதுக்குழு - செயற்குழு கூடாத நேரங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், கொள்கை, திட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அடுத்த பொதுக்குழுவில் அதற்கான ஒப்புதலை பெறலாம்.  தேவையை பொறுத்து, வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கவோ, குடுக்கவோ பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உண்டு.

மேலும் படிக்க: ‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்’.. சொத்தில் பங்கு கோரி முதியவர் வழக்கு

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் A மற்றும் B பார்ம் படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையொப்பமிட முடியும்.
அதிமுக உட்கட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தவிர்த்து கூடுதலாக குறிப்பாக பெண்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு.

 
Published by:Murugesh M
First published:

Tags: ADMK, AIADMK, Edappadi palanisamy, EPS

அடுத்த செய்தி