தமிழகத்துக்கு நன்மை செய்பவருடனே கூட்டணி: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்றவர்களே மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: January 12, 2019, 8:38 AM IST
தமிழகத்துக்கு நன்மை செய்பவருடனே கூட்டணி:  எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: January 12, 2019, 8:38 AM IST
தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்றவர்களே மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கே தங்களது ஆதரவு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கிராமங்களை கண்டுகொள்ளாத ஸ்டாலின், தற்போது கிராமம், கிராமமாக சென்று மக்கள் பிரச்னைகளை கேட்பதாக தெரிவித்தார். நாங்கள் அனைவரும் கிராமத்தில் பிறந்தவர்கள். அதனால் கிராம மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்றவர்களே மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்கே தங்களது ஆதரவு என்றும் திட்டவட்டமாகக் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Also see...புதிய உலக சாதனை படைத்த ஜியோ பொங்கல்!
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...