ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

அரசியல் கட்சித் தலைவர் என்று பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கைள் ஏற்கப்பட்டு கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதியில் தொடங்கி வைக்க உள்ளார். அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று முதல் தொடங்கியது. வீடுவீடாகச் சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 8ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும்.

இந்த டோக்கனில் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 22ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. கரும்பும் இடம்பெற வேண்டும் விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர் என்று பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கைள் ஏற்கப்பட்டு கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் விருத்தாசலத்தில் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வீடுகளை வழங்கி பேசினார். அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய அரசு ஆயிரம் மட்டுமே அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது 5000 ரூபாய் வழங்க வலியுறுத்தியதையும் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பரிசு தொகையாக தமிழக அரசு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, EPS, Pongal, Pongal Gift