முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க... கொடநாடு வழக்குல திமுகவுக்கும் தொடர்பு?”... பரபரப்பை கிளப்பிய இபிஎஸ் பேச்சு..!

“சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க... கொடநாடு வழக்குல திமுகவுக்கும் தொடர்பு?”... பரபரப்பை கிளப்பிய இபிஎஸ் பேச்சு..!

இபிஎஸ் பரப்புரை

இபிஎஸ் பரப்புரை

Edapadi Palanisamy Speech On Kodanadu Murder | ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதனையடுத்து காந்தி சிலை பகுதியை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி, பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் தென்னரசுவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் தென்னரசு எனவும் தெரிவித்தார்.

22 மாத திமுக ஆட்சியில் ஈரோட்டில் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என குற்றச்சாட்டிய எடப்பாடி பழனிசாமி,  “கொடநாடு வழக்கை சொல்லி முதல்வர் பேசுகின்றார். அதை  தெளிவுபடுத்துகிறேன். கொடநாட்டில் திருட்டு, கொலை நடந்தது, அதை கண்டுபிடித்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜபடுத்தியது அதிமுகதான்” என்றார்.

குற்றவாளிக்கு ஜாமின் கொடுத்தது திமுக எனவும், திமுக எம்.பி ஜாமீன் வாங்கி கொடுக்கின்றார் எனவும் தெரிவித்தார். கொடநாட்டை சொல்லி பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் நடக்காது என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி  90 சதவீதம் முடிந்தது என சொன்னீர்களே, பின்னர் சிபிசிஐடிக்கு எதுக்கு மாற்றினீர்கள் என கேள்வி எழுப்பினார்.

குற்றவாளிகளுக்கும் திமுகவினருக்கும் சம்மந்தம் இருக்குமோ என பொது மக்கள் சந்தேகப்படுகின்றனர் என பேசிய ஈபிஎஸ், இதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகின்றீர்கள்? எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். திமுக வக்கீல்  ஏன் ஜாமீன்  வாங்கி கொடுக்கின்றார்? இவர்களுக்கும்  அவர்களுக்கும்  தொடர்பு என  மக்கள்  நினைக்கின்றனர், சீக்கிரம் இது தொடர்பாக தகவல்கள் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றும்  திமுக - காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்றும், அதை எதிர்த்து அதிமுக எனவும் தெரிவித்தார். உதயநிதி சொன்னதால் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகமல் இருந்து விட்டனர். இதுவரை 12 உயிர் போய் விட்டது, மாணவர்களின்  உயிர் போனதுக்கு  திமுகவும் ,உதயநிதியும்தான்  பொறுப்பு எனக் குற்றம்சாட்டினார்.

First published:

Tags: EPS, Erode East Constituency, Kodanadu estate