ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார் சபாநாயகர் - இபிஎஸ் ஆவேசம்!

ஒபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார் சபாநாயகர் - இபிஎஸ் ஆவேசம்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சபாநாயகர் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்று ஆவேசமாக தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஓபிஎஸ்க்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

  அதிமுக-வில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் வலுத்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

  இதுகுறித்து சட்டப்பேரவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி இல்லை என சபாநாயகர் அறிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

  மேலும், நேற்றைய அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

  இந்த நிலையில், காவல்துறையினரின் அனுமதியை மீறி இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து  இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து சென்னை ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் அவர் நிறைவேற்றவில்லை, மாறாக ஸ்டாலின் ஆலோசனையின் படி செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

  சபாநாயகர் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்று கூறிய அவர், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்படுகிறார் என கூறியுள்ளார். போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது ஜனநாயக படுகொலை என தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Admk protest, Cm edapadi palanisami, EPS