ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''ஆளுநரை வைத்துக்கொண்டு முதல்வர் பேசுவது மரபுக்கு எதிரானது'' - எடப்பாடி பழனிசாமி

''ஆளுநரை வைத்துக்கொண்டு முதல்வர் பேசுவது மரபுக்கு எதிரானது'' - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பேட்டி

எடப்பாடி பேட்டி

Edapadi palanisamy pressmeet | சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

ஆளுநர் உரையால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை சம்பிரதாய முறைப்படி அறிவிக்கப்படும் ஒரு உரை. ஆனால், ஆளுநர் உரையில் பெரிய திட்டங்கள் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

பொதுமக்கள் குற்றச்சாட்டை நீடிக்கும் வகையில் தற்புகழ்ச்சியோடு ஆளுநர் உரை இருக்கிறது. வெற்று உரையாக உள்ள ஆளுநர் உரையால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது எனவும் பேசினார்.

மாநிலத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கொலை கொள்ளை போதைப்பொருள் தங்கு தடை இல்லாமல் கிடைக்கிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு எல்லாம் போதைப் பொருள் கடத்தப்படுகிறது என விமர்சித்தார்.

First published:

Tags: Cm edapadi palanisami, CM MK Stalin, EPS, RN Ravi, TN Assembly