முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுச்செயலாளர் தேர்தல்.. தீவிர களப்பணிக்கான திட்டம்- அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது?

பொதுச்செயலாளர் தேர்தல்.. தீவிர களப்பணிக்கான திட்டம்- அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது?

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

ADMK Meeting | பொதுச் செயலாளர் தேர்தலை விரைவில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுகவின் மாவட்டச் செயலாளர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. விரைவில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பேசப்பட்டது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை மிக தீவிரமாக கவனிக்க வேண்டும். பூத் அளவில் கட்சி நிர்வாகிகளை இப்பொழுது இருந்தே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை மிக தீவிரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் ஆகிய விஷயங்கள் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க இடையே இருக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை, அதிமுகவில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசியது குறித்த பிரச்சனை இருந்தது. ஆனால் அது குறித்து பேசப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.கவின் செல்வாக்கு அடுத்து அடுத்து நடந்த தேர்தல்களில் சரிந்து வருகிறது. இதை சரி செய்ய இப்போதே இருந்து தேர்தல் பணிகளை மேற்கோள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடந்த, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடை தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரனிடம், அ.தி.மு.க தோல்வியைத் தழுவியது.அதை தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரன் மட்டும், அ.தி.மு.கவிலிருந்து வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். அந்த தேர்தலின்போது, 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும், அப்போதைய எதிர்கட்சியான தி.மு.கதான் அதிக இடங்களில் வென்றது. எண்ணினும் அ.தி.மு.க ஆட்சியை தக்க வைக்க தேவையான அளவு வெற்றியை பெற்றது.

அதை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், பின்னர் நடந்த 2021ஆம் சட்டசபை பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 67 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சியாக மாறியது. அதை தொடர்ந்து மறு சீரமைப்பு செய்யப்பட்ட எட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க பின்னடைவை சந்தித்தது. கடந்த ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் ஒரு மாநகராட்சி கூட கைப்பற்ற முடியாமல் அதிமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது.

அதிமுகவில் ஓ.பி.எஸ், இபிஎஸ் இடையேயான தலைமை யார் என்ற பிரச்சனைகள் காரணமாக நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.முக 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் தோல்வி அடைந்தது.

முதல்வரின் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்கலாம் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன காரணம்

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேலும் ஒரு பின்னடைவை சந்திக்க கூடாது என்பதற்காக இப்போது இருந்தே எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக களப்பணி மேற்கொள்ள இருக்கிறார். விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி முடித்த பிறகு தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

First published:

Tags: ADMK, EPS