மேகதாது அணை விவகாரம்! பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு சுற்றுச் சூழல் அனுமதி கேட்பது, காவிரி மேலாண்மை வாரியத்தின் இறுதி உத்தரவுக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது.

news18
Updated: June 24, 2019, 7:46 PM IST
மேகதாது அணை விவகாரம்! பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
மேகதாது ஆறு
news18
Updated: June 24, 2019, 7:46 PM IST
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரும் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், புதிய அணைக்கான வரைபடத்துடன் கர்நாடக அரசு, அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. கர்நாடக அரசின் இந்தச் செயல் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ‘மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு சுற்றுச் சூழல் அனுமதி கேட்பது, காவிரி மேலாண்மை வாரியத்தின் இறுதி உத்தரவுக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது.

கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கொள்கிறேன். கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்தின் அறிக்கைக்கு தமிழக அரசின் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மத்திய அரசு அந்த அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...