முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பழனிசாமி என்னும் சர்வாதிகாரி கையில் அதிமுக - சசிகலாவால் மட்டுமே மீட்க முடியும்: புகழேந்தி!

பழனிசாமி என்னும் சர்வாதிகாரி கையில் அதிமுக - சசிகலாவால் மட்டுமே மீட்க முடியும்: புகழேந்தி!

புகழேந்தி

புகழேந்தி

எடப்பாடி பழனிசாமி எனும் சர்வாதிகாரியின் கையில் அதிமுக தற்போது சிக்கியுள்ளது, சசிகலாவால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என்று புகழேந்தி தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

எடப்பாடி பழனிசாமி என்னும் சர்வாதிகாரி கையில் அதிமுக சிக்கியுள்ளதாகவும் சசிகலாவால் மட்டுமே அதிமுகவை மீட்க முடியும் என்றும் அக்கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்ட கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை மரியாதை நிமித்தமாக  சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி,  தன்னுடன் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளதால் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுகிறதா?அண்ணாமலை விளக்கம்!

மேலும், ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகிய இருவரும் அதிமுக வை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் டெல்லி தெருக்களில் அலைகிறார்கள்; கட்சியை காப்பாற்ற அல்ல என்றும் விமர்சித்த புகழேந்தி, “மிகவும் மோசமான நிலையில் உள்ள  அதிமுக, மீட்டெடுக்க முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும். ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகியோர் தங்கள் அடிமை வாழ்வை தொடர டெல்லி வீதிகளில் சுற்றி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.

சசிகலா அழைத்தால் சந்தித்து பார்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியு புகழேந்தி, சசிகலாவால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: தமிழினத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது !

திமுக இல்லையென்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளதாக குறிப்பிட்ட அவர், தான்

பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் என்றும் திராவிட இயக்க சிந்தனையில் தன்னுடைய செயல்பாடு இருக்கும் என்றும் விரைவில் தன்னுடைய  முடிவை அறிவிப்பதாகவும் கூறினார்.

First published:

Tags: ADMK, Edappadi palanisamy, Pugazhendhi