இந்து மதம் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா குறிப்பிட்ட அந்த வார்த்தை அவர் கட்சி தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா ? அவரது மருமகனுக்கு பொருந்துமா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லியில் இருந்து விமான மூலம் இரவு கோவை வந்தடைந்தனர். பின்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமி்த்ஷாவை வேலுமணி, சி.வி.சண்முகத்துடன் சந்தி்த்து பேசியதாகவும், முக்கியமான சில கோரிக்கைகள் அவரிடம் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முக்கியமாக கோதாவாரி காவிரி திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் எனவும்,நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை நிறைவேற்றபட வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.தமிழகத்தில் போதை பொருள் தடையில்லாமல் கிடைக்கின்றது,கஞ்சா போன்ற போதை பொருட்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் நிலை உருவாகியுள்ளாதால் இதனை தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம் எனவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திமுகவில் இருந்து அதன் தலைவர்கள் விலகுவது 16 மாத கால ஆட்சியின் சாதனை , ஓவ்வொருவராக கட்சியில் இருந்து விலகுவது திராவிட மாடல் என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சுகீழ்தரமானது, இந்து மதத்தை புண் படுத்தும் விதமான பேச்சு எனவும்,இது வன்மையாககண்டிக்கதக்கது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் ராஜ்ஜியத்திற்கான மதிப்பெண் பூஜ்ஜியம்" - ஆர்.பி.உதயகுமார்
மேலும் ஆ.ராசா குறிப்பிட்ட அந்த வார்த்தை அவர் கட்சி தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா ? அவரது மருமகனுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுப்பிய அவர்,அவரது கட்சி தலைவர் இந்த கேள்விக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்த்தேன், பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.இந்து முன்னணி நடத்திய பந்த் வெற்றியாக முடிந்தது என சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் எனவும் கூறினார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது எனவும், இதுதொடர்பாக உள்துறை அமைச்சரை சந்தித்ததாக சொல்வது தவறானது எனவும் தெரிவித்த அவர்,நாங்க எதுக்காக சென்றோம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2018-ல் 2 லட்சம்... 2021ல் 14 லட்சம்... நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்... தடுக்கும் வழிமுறைகள் என்ன?
இந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை என கூறிய அவர், வறண்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு தடையில்லாமல் நீர் கிடைக்கும் என்பதால் நதி நீர் கோரிக்கையை நினைவுபடுத்தவே அவரை சந்தி்தோம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் பரவும் காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை எனவும், இது எளிதாக பரவும் காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார்
இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களையும் குழந்தைகளையும் காக்க வேண்டும் எனவும்,மருத்துவகுழுவினர் இதுகு, றித்து ஆராய்ந்து காய்ச்சல் பரவலை தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பின்னர் கார் மூலமாக சொந்த ஊரான சேலத்துக்கு அவர் கிளம்பிச் சென்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Amith shah, Coimbatore, CV Shanmugam, Delhi, EPS, SP Velumani