Home /News /tamil-nadu /

ஒரு கிளை கழக செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..

ஒரு கிளை கழக செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

எங்களை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் தொடருங்கள், மனமில்லை என்றால் புறம் பேச வேண்டாம் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஒரு கிளை கழக செயலாளருக்கும் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என்றும் அவர் அறிவுரை வழங்கிய கட்சிகள் எல்லாம் ஒண்ணும் இல்லாமல் போய்விட்டது. எங்களை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் தொடருங்கள், மனமில்லை என்றால் புறம் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தன்னை பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்த போதே ஜெயலலிதாவை விமர்சித்தவர். அங்கிருந்து பாமகவுக்கு போனார் பாமகவை மறந்து விட்டார். தேமுதிகவுக்கு போனார் அந்தக் கட்சியை மழுங்கடித்து விட்டார் . தற்போது நமக்கு அறிவுரை சொல்கிறார் . உங்கள் அறிவுரை எதுவும் வேணாம். நாங்கள் நன்றாக இருக்கிறோம் என கூறினார்.

நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்தபோது பல போராட்டங்களை சந்தித்தேன். அரசை நடத்த வேண்டும் அதே வேலையில் வறட்சி ஒரு பக்கம், மழை ஒரு பக்கம் கொரோனா ஒரு பக்கம் என பல்வேறு சோதனைகளை சந்தித்தேன். இது தவிர நம்ம கட்சிக்குள்ளேயே எனக்கு குழி பறித்தார்கள்.

கடந்த தேர்தலில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தேன். 75 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். நான் ஒரு சாதாரண தொண்டன் ஆனால் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சிக்கிறார் . ஒரு கிளை கழக செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட உங்களுக்கு இல்லை. அவர்  என்னை எவ்வளவு அவதூறு பேசினாலும் அதை படிக்கட்டுகளாக எண்ணி வெற்றி பெறுவோம் என கூறினார்.

Also Read: கடந்த 6 ஆண்டுகளில் 11 தற்கொலைகள்..! சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது..?

ஒரு கிளை கழக செயலாளருக்கும் இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை.. அவர் அறிவுரை வழங்கிய கட்சிகள் எல்லாம் ஒண்ணும் இல்லாமல் போய்விட்டது. எங்களை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் தொடருங்கள், மனமில்லை என்றால் புறம் பேச வேண்டாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Published by:Arunkumar A
First published:

Tags: Admk protest, Chengalpattu, EPS

அடுத்த செய்தி