Home /News /tamil-nadu /

எம்.எல்.எம் முறையில் உறுப்பினர்களை சேர்த்து மோசடி: ஆம்வே நிறுவன சொத்துக்கள் முடக்கம்

எம்.எல்.எம் முறையில் உறுப்பினர்களை சேர்த்து மோசடி: ஆம்வே நிறுவன சொத்துக்கள் முடக்கம்

ஆம்வே இந்தியா

ஆம்வே இந்தியா

Amway India: மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல நிறுவனமான ஆம்வேக்கு சொந்தமான ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல நிறுவனமான ஆம்வேக்கு சொந்தமான ரூ.758 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

    மாபெரும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி ஆம்வே நிறுவனத்தின் ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.  ஆம்வே நிறுவனத்தின் ரூ.411.83 கோடி அசையா சொத்தையும், வங்கிக்கணக்கில் உள்ள ரூ.345.94 கோடி தொகையையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆம்வே நிறுவனம் வெளி சந்தையில் கிடைக்கும் பொருள்களுக்கு மாற்றாக தனது நிறுவனப் பொருள்களை மிக அதிகமாக நியமற்ற விலையில் விற்பனை செய்தது. தனது மோசடி திட்டததை செயல்படுத்த பொது மக்களை தனது நிறுவனத்தில் இணைக்க பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி ஈர்த்துள்ளது.

    புதிய உறுப்பினர்கள் பொருள்களை வாங்க பயன்படுத்தப்படவில்லை. மாறாக அவர்கள் புதிய உறுப்பினர்களை சேர்த்து அதன் மூலம் கமிஷன் ஈட்டி லாபம் பெறவே இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் ஒரு பொருளின் விலை மேலும் உயர்கிறது.

    ஒட்டுமொத்த நிறுவனமும் பொருள் மீது கவனம் செலுத்தாமல் புதிய உறுப்பினர்களை சேர்த்து எப்படி பணக்காரர்கள் ஆவது என்பதிலேயே கவனம் செலுத்தி MLM பிரமீடு அடிப்படையில் ஆம்வே நிறுவனம் இந்த மோசடியை செய்துள்ளது.

    2002 முதல் 2022ஆம் ஆண்டு முதல் ரூ.27,562 கோடி தொகையை வணிக செயல்பாட்டிற்காக ஆம்வே நிறுவனம் வசூலித்துள்ளது. இதில், தனது உறுப்பினர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ரூ.2,588 கோடி கமிஷனாக தந்துள்ளது. ஆம்வே நிறுவனத்தை பிரமோட் செய்ய பிரிட் வெர்ல்ட்வைட் இந்தியா நிறுவனமும், நெட்வொர்க் 21 பிரைவட் லிமிட்டெட் நிறுவனமும் முக்கிய பங்காற்றியுள்ளன. உறுப்பினர்களை சேர்க்க இந்த இரு நிறுவனங்களும் பகட்டான வாழ்கையை முன்னிறுத்தி பல மெகா கூட்டங்களை போட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து திண்டுகல் மாவட்டத்தில் உள்ள ஆம்வே நிறுவனத்தின் தொழில்சாலைகள், பொருள்கள் ஆகியவை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் ஆம்வே நிறுவனத்தின் நேரடி விற்பனையாளர்களாக சுமார் 5.5 லட்சம்  பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Enforcement department

    அடுத்த செய்தி