”ஐசியு-வுக்கு எடுத்துச்செல்லும் நிலையில் நிதி நிலைமை” - மு.க. ஸ்டாலின் காட்டம்..

மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் தவறான நிதி மேலாண்மையால் தமிழகத்தின் நிதி நிலைமை ஐசியு-விற்கு எடுத்துப் போகும் அளவுக்கு மோசமடைந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடன் வாங்குவதை மட்டுமே தனக்குத் தெரிந்த ஒரே 'நிதி நிர்வாக உத்தியாகக் கற்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி அரசு, கொரோனா பேரிடர் காலத்தில் மிக மோசமாகத் தோல்வியடைந்து, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தாங்க முடியாத கடன் சுமையை ஏற்றி வைத்திருப்பதாக சாடியுள்ளார்.

  Also read: முதல்வர் வேட்பாளர் யார்? - மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

  ஒவ்வொரு முறை பிரதமரிடம் பேசும்போதும் 'கொரோனா நிதி' கேட்பதை மட்டும் அறிக்கையாக வெளியிடும் முதலமைச்சர், அப்படிக் கேட்டதில் பத்து சதவீத நிதி கூட வரவில்லை என்று வெளிப்படையாக பேசவே அச்சப்படுவதாகவும் கூறியுள்ளார்.

  கொரோனா கால பாதிப்பை மனதில் வைத்து, நிதிநிலை அறிக்கையை மறு ஆய்வு செய்து, எஞ்சியிருக்கும் ஆறு மாதங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்யுமாறு மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
  Published by:Rizwan
  First published: