காற்று மாசு உள்ள நகரங்களில் பசுமைப் பட்டாசுகள் மட்டும் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி நகரங்களில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் வரும் 30-ம் தேதி வரை பட்டாசுகள் விற்க, வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு வெளியே மற்ற மாநிலங்களில் எங்கெல்லாம் காற்று மாசின் அளவு மோசமான நிலையை எட்டியுள்ள எட்டு நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை.
27 அக்டோபர், 2020, அபர்ணா பேனர்ஜி ஆய்வுக்கட்டுரையின்படி, காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்கனவே பரவிவரும் கொரோனா தாக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு, அதன் தீவிரத்தை அதிகரித்து மரணத்துக்கு காரணமாக அமையலாம் என்பதை ஐ.சி.எம்.ஆர் கண்டறிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பசுமைத் தீர்ப்பாய ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.