அமமுக அலுவலகத்தில் ரூ.1.48 கோடி பறிமுதல்... ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு?

இன்று காலை வரை நடந்த சோதனையில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

news18
Updated: April 17, 2019, 8:32 AM IST
அமமுக அலுவலகத்தில் ரூ.1.48 கோடி பறிமுதல்... ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு?
அமமுக அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.48 கோடி
news18
Updated: April 17, 2019, 8:32 AM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அமமுக கட்சி அலுவலகத்தில் இருந்து ரூ.1.48 கோடி பணத்தை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசனின் குடோனில், 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, அந்தத் தொகுதி மக்களவைத் தேர்தல் மட்டும் ரத்து செய்வதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தி.மு.க வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை செய்ய சென்றுள்ளனர். அப்போது, அவர்களை அங்கிருந்தவர்கள் தள்ளியதாக கூறப்படுகிறது. எனவே, காவல்துறையினர் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதனை அடுத்து, அங்கு அசாதரண நிலை ஏற்பட்டது. பின்னர், சூழலை கட்டுக்குள் கொண்டு வந்த போலீஸார் அமமுக அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இன்று காலை வரை நடந்த சோதனையில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

அமமுகவை சேர்ந்த செல்வம், பொன்முருகன், பழனி, சுமன்ராஜ், பிரகாஷ்ராஜ், மது மற்றும் 150 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பழனி, சுமன்ராஜ், பிரகாஷ்ராஜ், மது ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...