230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள், இ -மெயில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள், இ -மெயில்  விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் அலுவலர்களின் விபரங்களை வெளியிடக்கோரி ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

  • News18
  • Last Updated :
  • Share this:
பொதுத்துறை இணையதளத்தில், 230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் தொடர்பு எண்கள், இ -மெயில் விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக, மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து கடந்த ஜனவரி 21-ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,தேர்தல் ஆணைய அறிவிப்பில் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளின் முகவரி, கைபேசி எண், வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் முகவரி என்பன போன்ற தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், இதுசம்பந்தமாக தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியதாகவும், விவரங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என கோரியிருந்தார்.

Also read... Gold Rate: சவரனுக்கு ரூ. 232 குறைந்தது தங்கத்தின் விலை.. மாலை நிலவரம் என்ன?

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுத்துறை இணையதளத்தில், 230 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் தொடர்பு எண்கள், இ மெயில் முகவரிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கான அதிகாரிகள் விவரங்கள் இன்று வெளியிடப்படும் எனவும், உத்திரமேரூர் தொகுதிக்கான விபரங்கள் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என
உறுதியளித்தார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் அலுவலர்களின் விபரங்களை வெளியிடக்கோரி ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: