'மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் வெளி மாநில தேர்தல் பார்வையாளர்!'-தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குகள் எண்ணப்படும் போது வெளி மாநிலத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒருவரை தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார் என விளக்கமளித்தார்.

'மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் வெளி மாநில தேர்தல் பார்வையாளர்!'-தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: April 30, 2019, 7:14 PM IST
  • Share this:
மதுரை மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணப்படும் போது, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற மதுரை நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த மையத்துக்குள் தாசில்தாரர் சம்பூர்ணம் ஏப்ரல் 20-ம் தேதி அத்துமீறி நுழைந்ததையடுத்து சம்பந்தப்பட்ட பெண் தாசில்தாரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், உதவி காவல் ஆணையர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோரை மாற்றபட்டுவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இடமாற்றம் செய்யப்பட்ட மதுரை ஆட்சியர் நடராஜன் தாக்கல் செய்த பதில் மனுவில், தன்னுடைய தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் பணியிடம் மாற்றம் செய்யபட்டுள்ளதாகவும், எனவே அந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என தெரிவிக்கபட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குகள் எண்ணப்படும் போது வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒருவரை தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார் என விளக்கமளித்தார்.

இதனையடுத்து வழக்கின் விசாரணை, மீண்டும் ஜூன் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Also see...

First published: April 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading