தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முரசு சின்னம்

முரசு சின்னத்தில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தேமுதிக போட்டியிடலாம் என அறிவிப்பு

  • Share this:
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது, தனித்து களம் காணுமா என்பது இன்றும் முடிவாகாமல் இருக்கின்றது.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் இணைந்து போட்டிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், நேற்று கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தங்கள் அழைப்பிற்கு தேமுதிக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் கூறியுள்ளார்.

Must Read : அமமுகவுடன் தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை?: 50 சீட் கேட்பதாக தகவல்

இந்நிலையில், தேமுதிகவுக்கு அந்த கட்சியின் சின்னமான முரசு சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த சின்னத்தில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தேமுதிக போட்டியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: