அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

இந்த நான்கு தொகுதிகளுக்கும் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கைவைக்கப்பட்டது.

news18
Updated: April 24, 2019, 7:56 PM IST
அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
Breaking News
news18
Updated: April 24, 2019, 7:56 PM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கான மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்று முடிந்தது.

மேலும், மீதமுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மே 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிட்டனர்.

எனவே, இந்த நான்கு தொகுதிகளுக்கும் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கைவைக்கப்பட்டது. அ.ம.மு.கவின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், அக்கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...