ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு? அதிகாரிகள் ஆலோசனை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு? அதிகாரிகள் ஆலோசனை

ஆதார் இணைப்பு

ஆதார் இணைப்பு

aadhar link with eb | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை மறுநாளுடன் ஒரு மாத கால அவகாசம் நிறைவடைகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.இதற்காக நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைவதால், மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் சிலர் இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால் அதிகாரிகள் கால அவகாசம் வழங்கலாமா என ஆலோசித்து வருகின்றனர்.

First published:

Tags: Aadhar, EB Bill, Tamilnadu government