முகப்பு /செய்தி /தமிழ்நாடு / EB ஆதார் எண் இணைப்பு: பிப்ரவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

EB ஆதார் எண் இணைப்பு: பிப்ரவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

இது இறுதி அவகாசம் இனி நேரம் கொடுக்க முடியாது. வெளியூர்களில் இருப்பவர்கள் 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் - செந்தில் பாலாஜி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலவசம், மானியம் பெறும் மின்நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மின் நுகர்வோரின் வசதிக்காக ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து இன்று வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, மின் வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், “இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும் 7 லட்சம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. அந்த 7 லட்சம் பேருக்காக பிப்ரவரி 28ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

13 நாட்களுக்குள் இணைக்க வேண்டும். இது இறுதி அவகாசம் இனி நேரம் கொடுக்க முடியாது. வெளியூர்களில் இருப்பவர்கள் 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதனிடையே இன்று மின் துறையின் இணையதளத்தில் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சேவை கேபிளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Aadhaar card, EB Bill, Senthil Balaji