மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணோளி வாயிலாக ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,மாண்டஸ் புயலை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார் நிலையில் இருப்பதாகவும், 11ஆயிரம் மின்சார ஊழியர்கள் தற்போது களப்பணியில் உள்ளனர் என தெரிவித்தார்.
200 பேர் கொண்ட சிறப்பு குழு தயார் நிலையில் உள்ளனர் என்றும் மழை அதிகம் உள்ள மாவட்டத்தில் உடனடியாக விரைந்து சென்று பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாக கூறினார். தேவையான அளவு உபகரணங்கள் கையிருப்பு உள்ளது என கூறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் 1100 ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
தற்போது வரை மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் மின்சார ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் புயல் காரணமாக தேவைக்கேற்ப காற்றின் வேகத்தை பொறுத்து, பாதிப்பு இல்லாமல் தவிர்க்க புயல் கடக்கும் போது மின்சாரத்தை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி உள்ளோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Senthil Balaji, Weather News in Tamil