முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அறிக்கைகள் எதிரி வாய்க்கு அவலாகி விடக்கூடாது- சிபிஎம் பாலகிருஷ்ணனுக்கு திமுகவின் முரசொலி அட்வைஸ்

அறிக்கைகள் எதிரி வாய்க்கு அவலாகி விடக்கூடாது- சிபிஎம் பாலகிருஷ்ணனுக்கு திமுகவின் முரசொலி அட்வைஸ்

கே. பாலகிருஷ்ணன்

கே. பாலகிருஷ்ணன்

திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல - முரசொலி

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம் என மின் கட்டண உயர்வு தொடர்பான கே.பாலகிருஷ்ணன் அறிக்கைக்கு முரசொலி கட்டுரையில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தொடர்பாக  கருத்து தெரிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் , மின் கட்டணத்தை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று கழக அரசும் விரும்பவில்லை தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடு தான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்க முடியாது தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று குரல் எழுப்புவது போல கேரளத்தில் மின் கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர் கடும் விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டனர் அதனையும் கே. பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார்.

எந்த மக்கள் நல அரசும் அது திமுக  அரசாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசாக இருந்தாலும் சில சூழ்நிலை காரணமாக இது போன்ற கட்டண உயர்வுகளை அறிவிக்க வேண்டிய நிலை உருவாகி விடுகிறது. இப்படி இக்கட்டான சூழல் உருவாகும் போது இந்த கட்டண உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் செலுத்திட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க இடம் இல்லை.

இதையும் படிங்க: மாணவர்களுக்கான ‘சிற்பி’ எனும் புதிய திட்டம் இன்று தொடக்கம் - என்ன சிறப்பு அந்த திட்டத்தில்?

திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்?ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம் ’என முரசொலியில் கட்டுரை வெளிவந்துள்ளது.

First published:

Tags: CPM balakrishanan, DMK, DMK Alliance, EB Bill, Murasoli