முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "7 நாட்கள்தான் டைம்... மின் இணைப்பு துண்டிக்கப்படும்...” - மின்வாரியம் கொடுத்த ஷாக்... அலறும் அரசு அலுவலங்கள்!

"7 நாட்கள்தான் டைம்... மின் இணைப்பு துண்டிக்கப்படும்...” - மின்வாரியம் கொடுத்த ஷாக்... அலறும் அரசு அலுவலங்கள்!

மின் இணைப்பு துண்டிப்பு

மின் இணைப்பு துண்டிப்பு

தெருவிளக்கு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துவதற்கு நோட்டீஸ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

முறையாக மின் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களில் இணைப்பை துண்டிக்க மின்வாரியம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15-ம் தேதி மின்வாரியத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத் துறைகள் தவிர மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள இதர அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய தலைவர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், தெருவிளக்கு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

First published:

Tags: EB Bill, TANGEDCO