• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கு காலத்தில் வசூலிக்கப்பட்ட மின் கணக்கீட்டு முறை செல்லும் - மீண்டும் உறுதி செய்த உயர்நீதிமன்றம்

ஊரடங்கு காலத்தில் வசூலிக்கப்பட்ட மின் கணக்கீட்டு முறை செல்லும் - மீண்டும் உறுதி செய்த உயர்நீதிமன்றம்

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

ஊரடங்கு காலத்தில் வசூலிக்கப்பட்ட மின் கணக்கீட்டு முறை செல்லும் என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

  • Share this:
    ஊரடங்கு காலத்தில் வசூலிக்கப்பட்ட மின் கணக்கீட்டு முறை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணம் முந்தைய மாத அடிப்படையிலேயே வசூலிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.



    மின் கட்டண முறையில் விதிமீறல் இல்லை என கூறி எம்.எம்.சுந்தரேஷ் ஹேமலதா அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீண்டும் அதே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: