Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. கால அவகாசத்தை நீட்டித்து மின்வாரியம் உத்தரவு!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. கால அவகாசத்தை நீட்டித்து மின்வாரியம் உத்தரவு!

EB ஆதார் இணைப்பு

EB ஆதார் இணைப்பு

இதுவரை 1 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ம் தேதி வரை கால நீட்டித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.

இதற்காக நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 31ஆம் தேதியுடன்) அவகாசம் முடிவடைவதால், மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் சிலர் இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

First published:

Tags: Aadhar, EB Bill, TNEB