18 வயது ஆகிவிட்டதா? வாக்காளர் அட்டைக்கு இன்றே விண்ணப்பியுங்கள்!

மாதிரி படம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்று, வயது சான்று, அடையாள சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

 • Share this:
  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக இன்றும் நாளையும் சிரப்பு முகாம் நடைபெறுகிறது.

  வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பெயரை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ விண்ணப்பிக்கலாம். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ளது

  புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருந்தால், உங்கள் வீட்டு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதேபோல், 12.12.2020, 13.12.2020 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்று, வயது சான்று, அடையாள சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

  ஆன்லைன் மூலம் புதிய பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய விரும்புவோர் www.nsvp.in என்ற இணையதளம் மூலமும் அதோடு Voters Help line என்ற ஆப் மூலம் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.  நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
  Published by:Vijay R
  First published: