சென்னையில் லேசான நில நடுக்கம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

Earth Quake

ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளது.

  • Share this:
சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக பரவிய தகவலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று மதியம் சரியாக 12.35 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவில் இருந்து 296 கிமீ தூரத்தில் சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சென்னையிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், அடையாறு, போரூர் உள்பட, சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஏற்கனவே புயல் வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் சொல்லனா துயரை சந்தித்திருக்கும் சென்னைவாசிகள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததும் பெரும் பீதி அடைந்தனர். இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
Published by:Arun
First published: