கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 10-ம் தேதி காலை 4.00 மணி முதல் 24-ம் தேதி காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முழு ஊரடங்கு காலத்தில், தமிழ்நாட்டில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 15-ம் தேதியிலிருந்து காலை 4.00 மணி முதல் 24-ம் தேதி காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஒருசில புதிய கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு.
இதனைத் தொடர்ந்து, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை (https://eregister.tnega.org) இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு அறிவித்த இ-பதிவு என்பது இ-பாஸ் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தில், ‘பொதுமக்கள்,இ -பாஸ் போன்று பதிவு செய்து அனுமதிக்காக காத்திருக்காமல், இ-பதிவு மூலம் பதிவு செய்து பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Lockdown