• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு - இ-பாஸ் நடமுறை ரத்து

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு - இ-பாஸ் நடமுறை ரத்து

மாதிரி படம்

மாதிரி படம்

  • Share this:
    தமிழகத்தில் மாநிலத்துக்குள் செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், வெளிநாடு, வெளிமாநிலங்களிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன. இந்தநிலையில், மத்திய அரசும் இ-பாஸ் நடைமுறையை மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

    இந்தநிலையில், எட்டாம் கட்ட ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து வந்த இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலங்களுக்குள் பயணம் செய்வதற்கு இ-பாஸ் தேவையில்லை. ஆனால், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு இ-பாஸ் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு, ஆதார், பயணச்சீட்டு, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் தானியங்கி முறையில் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: