குமுளி வழியாக தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் இ - பாஸ் கட்டாயம்!

குமுளி வழியாக தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் இ - பாஸ் கட்டாயம்!

குமுளி

காவல்துறையினரின் சோதனையில் முகக்கவசம்,  இ பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்பப்பட்டடு வருகின்றனர்

 • Share this:
  கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் குமுளி வழியாக தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் இ - பாஸ் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதால்  எல்லைப்பகுதியில் தமிழக காவல்துறையினர்  தீவிரமாக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் இந்த பெருந்தொற்றை கட்டுபடுத்த  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் கடந்த 10-ஆம் தேதி முதல்  கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,  கட்டாய முகக் கவசம்,  மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு தடை, நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் மாநிலத்தில் இருந்து மாநிலம் வருவதற்கு இ.பாஸ் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் குமுளி பகுதியில் இன்று முதல் இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் பொதுமக்கள் அனைவரும் இ - பாஸ் சான்றிதழ் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

  காவல்துறையினரின் சோதனையில் முகக்கவசம்,  இ பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்பப்பட்டடு வருகின்றனர்.
  அதே வேளையில் கேரள எல்லைப் பகுதியில் தமிழக சுகாதாரம் மற்றும் வருவாய் துறையின் சார்பாக எந்த ஒரு முகாம்களும் இன்னும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Arun
  First published: