Home /News /tamil-nadu /

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம்

ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ்

பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவிவருவதால், இந்திய விமான நிலைய ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை சா்வதேச விமான நிலையங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துவந்தது. ஆனால், இப்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

    உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தொ்மல் ஸ்கேனா் பரிசோதனை, இ-பதிவு கட்டாயம் என்றும், கேரள மாநில பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் மற்றும், கோவை விமானநிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகளை இந்திய விமானநிலைய ஆணையம் விதித்துள்ளது.

    இது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, கேரளா மாநிலத்தில் இருந்து, தமிழகம் வரும் பயணிகள் அனைவரும், கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்.

    பிற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணியர் அனைவருக்கும் இ-பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்திற்கு வரும் இதர மாநில பயணிகள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.

    Must Read : ஒமைக்ரான்... போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் - கீதா கோபிநாத் எச்சரிக்கை

    சர்வதேச பயணிகளை பொறுத்தவரை, மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். இதே போல, ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விபரங்களை, www.aai.aero என்ற இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Airport, Chennai Airport, Corona, Omicron

    அடுத்த செய்தி