ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ பாஸ் கட்டாயம் இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் முகக் கவசம் அணியாமல் பேருந்தில் பயணம் செய்பவர்களை பேருந்திலிருந்து இறக்கி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று கொரானா பாதிப்பு ஏதுமில்லை. இதுவரை 35 நபர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பெண் மரணம் அடைந்ததாகவும் நால்வர் கொரானா நோய் பாதிப்பில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர் என்றும் மொத்தம் ராமேஸ்வரத்தில் 30 பேருக்கு கொரானா நோய் தொற்று நீடித்து வருவதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்திற்கு வெளிமாநில பக்தர்கள் அதிகப்படியாக வரும் காரணத்தால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு E-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நகர் காவல் துறை ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் E-பாஸ் இல்லாமல் வாகன பயணம் மேற்கொள்பவர்கள் வழிமறித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் அரசு பேருந்துகளில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பயணம் செய்யும் பயணிகளை பேருந்து நிலையம் அருகே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என நடத்துனரும் ஓட்டுனரும் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று கொரானா நோய்த்தொற்று இன்று ஏதும் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் அவர்களும் கொரானா பாதிப்பில் இருந்து விடுபடுவார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டி ராமேஸ்வரம் நகராட்சி ஆய்வாளர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர் பொ.வீரக்குமரன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.