• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Lockdown Extended | தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க E-Pass, E-Register நடைமுறை ரத்து!

Lockdown Extended | தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க E-Pass, E-Register நடைமுறை ரத்து!

ஊரடங்கு கட்டுப்பாடு

ஊரடங்கு கட்டுப்பாடு

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 5ம் தேதி காலையுடன் நிறைவடையும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் 12.07.21 வரை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 5.07.21 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

    மேலும், ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

    மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

    பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடம் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு தடை நீட்டிப்பு:

    மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து

    மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

    திரையரங்குகள்

    அனைத்து மதுக்கூடங்கள்

    நீச்சல் குளங்கள்

    பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

    பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

    உயிரியல் பூங்காக்கள்

    நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: