• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா பேரவை செயலாளர் வீட்டிலிருந்து2.5 கிலோ தங்கம், 10 சொகுசு கார்கள், ரூ.30 லட்சம் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல்

ஜெயலலிதா பேரவை செயலாளர் வீட்டிலிருந்து2.5 கிலோ தங்கம், 10 சொகுசு கார்கள், ரூ.30 லட்சம் லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல்

இளங்கோவன்

இளங்கோவன்

ஜெயலலிதா பேரவைச் செயலாளர் வீட்டிலிருந்து தங்கம், பணம், கார்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

  • Share this:
சேலம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும் 2013 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சேலம் இளங்கோவன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளங்கோவன் சொந்த ஊரில் 4.40 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே வைத்திருந்தார். குறிப்பாக 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரம்மாண்ட சொகுசு பங்களாக்கள் கட்டி இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொடர்பின் மூலம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் பெயரிலும், தன் மகன் பிரவீன்குமார் பெயரிலும் சொத்து சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

அந்த அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு முன்பு 30,24,540 ரூபாய் மட்டுமே சொத்துக்களாக வைத்திருந்த இளங்கோவன், 2013 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பலகோடிகள் முறைகேடாக சம்பாதித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இளங்கோவன் தனது வருமானத்தை விட 131 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இளங்கோவன் தனது பெயரிலும், தனது மகன் பெயரிலும் சொத்துக்களை சேர்த்து வைத்ததோடு மட்டுமல்லாது, பினாமி பெயர்களில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் சொத்துக்களை வாங்கி இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பதவியில் இருந்த காலத்தில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளை தொடர்பான கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக திருச்சி முசிறி ஆகிய பகுதியில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்து தற்போது அவர்களுக்கு தொடர்பான 26 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். குறிப்பாக சேலத்தில், நாமக்கல், சென்னை, திருச்சி என மொத்தம் 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இரு தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீண்குமார் ஆகியோரிடமிருந்து ரூ.30 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள், 2,650 சவரன் தங்க நகைகள், 282 கி.கி வெள்ளிபொருட்கள், 3 கணினி ஹார்ட் டிஸ்குகள், சொத்துகுவிப்புக்கான முக்கிய ஆவணங்கள் போன்றவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  கணக்கில் வராத வங்கி வைப்புத்தொகை ரூ. 68 லட்சம் பணம் கண்டறியப்பட்டுள்ளது. இளங்கோவன் அதிமுக ஜெ பேரவை செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: