அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை
சென்னை,
தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.
சொத்துகுவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்பழகன் 2016-21 ல் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருவாய்க்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.