Home /News /tamil-nadu /

நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு

நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு

திமுக பொருளாளர் துரைமுருகன்

திமுக பொருளாளர் துரைமுருகன்

  • News18
  • Last Updated :
    நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    துரைமுருகனுக்கு நெருக்கமானவராகக் கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான சிமென்ட் கிடங்கில் இருந்து ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெல்ல முடியாதவர்களின் தப்பு கணக்குதான் இந்தச் சோதனை என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

    இந்த நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வருமான வரித்துறை நேர்மையாக சோதனை நடத்தி பண பதுக்கலை கண்டுபிடித்திருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

    மேலும் துரைமுருகன் வீடு, அலுவலகங்களில் 12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்ததாக சூலூர் பிரசாரத்தில் முதலமைச்சர் கூறியிருந்தார்.

    முதலமைச்சர் இப்படி கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என்றும் தங்களுடைய வீடு, கல்லூரியில் சோதனை நடத்தி வருமான வரித்துறை கொண்டு சென்றது 10 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே என்றும் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

    12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது என முதலமைச்சர் நிரூபித்தால் தமது பதவியை ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ள துரைமுருகன், இல்லையெனில் முதலமைச்சர் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார்.

    நாடாளுமன்ற தேர்தலில் குழப்பம் விளைவிக்கவே ஆளும் அதிமுக இவ்வாறு சோதனைகளை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி