சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. நான்கு இடங்களில் நடைபெறும் அகழாய்வில் கொந்தகையில் நேற்று மாலை இரண்டு குழந்தைகள் முழு எலும்புகள் கண்டுபிடிக்கபட்டன.
அதில் ஒன்று 1.05 மீட்டர் அளவில் உள்ளன. மற்றொரு எலும்பு கூடு 0.65 மீட்டர் அளவில் உள்ளன. மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முழு எலும்பு கூடுகளை ஆய்வுக்காக எடுத்தனர்.
ஏற்கனவே இம்மாதம் 13-ம்தேதி ஒரு எலும்பு கூடும், 7-ம்தேதி குழந்தையின் முழு எலும்பு கூடும், ஜீன் 19 எலும்பு கூடும் கிடைக்கபெற்றன இதுவரை குழந்தையின் 5 முழு உருவ எலும்பு கூடுகள் கண்டு எடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்கள் கிடைக்க பெற்றறன. அதனை அடுத்து, மனித எலும்புகள், கிடைக்கபெற்று ஆய்வுக்கு அனுப்பி நிலையில் மற்றொரு குழியில் தொடர்ச்சியாக குழந்தைகள் எலும்புகள் கிடைக்கப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த எலும்புகளை ஆய்வு செய்த பின்னர், எந்த ஆண்டைச் சேர்ந்தவை, எலும்புகளின் பாலினம், வாழ்க்கை முறைகள் ஆகியவை தெரிய வரும் என தொல்லியல் துறை துனை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.