ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வாக்குசேகரிப்பில் புது ரூட்டில் குஷ்பு: சமையலறைக்கே சென்று டீ போட்டு கொடுத்து அசத்தல்!

வாக்குசேகரிப்பில் புது ரூட்டில் குஷ்பு: சமையலறைக்கே சென்று டீ போட்டு கொடுத்து அசத்தல்!

குஷ்பு

குஷ்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் குஷ்பு, பகுதிவாசி ஒருவரின் வீட்டிற்குள் சென்று சமயலறையில் டீ போட்டு கொடுத்து அசத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் குஷ்பு, பகுதிவாசி ஒருவரின் வீட்டிற்குள் சென்று சமயலறையில் டீ போட்டு அவர்களுக்கே கொடுத்து அசத்தியுள்ளார்.

10 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஈடுபட்டிருக்கும் குஷ்பு முதலில் திமுக, பின்னர் காங்கிரஸ் என சுழன்று கொண்டிருந்த நிலையில் திடீரென இவ்விரு கட்சிகளுக்கும் நேரெதிர் கொள்கை கொண்ட பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இணைந்ததோடு மட்டுமல்லாமல் முதல் முறையாக தேர்தல் களமும் காண்கிறார்.

திமுகவின் கோட்டையாக விளங்கும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியிருக்கும் குஷ்பு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். போட்டியிடுவது மட்டுமல்ல வெற்றி பெறுவதே லட்சியமாக கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெற்றியை குறிக்கோளாக கொண்டிருப்பதுடன் அதற்கேற்றார் போல களப்பணியையும் அமைத்து ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார் குஷ்பு. நட்சத்திர வேட்பாளராக இருப்பதால் தொகுதியில் குஷ்பு விசிட் அடிப்பதை பார்க்க மக்கள் கூட்டமும் திரண்டுவிடுகிறது.

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று குஷ்பு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.  குலாம் அபாஸ் அலிகான் 7வது தெருவில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்த குஷ்புவிடம் முஸ்தபா, சலீன் ரீட்டா என்ற தம்பதியர் தங்களின் வீட்டுக்கு வந்து தேனீர் அருந்திச் செல்ல வேண்டும் என்று  கேட்டுக்கொண்டனர். அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் வீட்டுக்குள் சென்ற குஷ்பு, திடீரென அந்த வீட்டின் சமையலறைக்கே சென்று அவரே தன் கைகளால் தேனீர் போடத் தொடங்கினார். பின்னர் அனைவருக்கும் தேனீர் கொடுத்து உபசரித்தார்.

குஷ்பு

ஒரு காலத்தில் கோவில் கட்டுமளவுக்கு புகழின் உச்சியில் நடிகையாக திகழ்ந்தவர் தங்கள் வீட்டிற்கு வந்து டீ தயாரித்து கொடுத்ததை கண்டு முஸ்தபா, சலீன் ரீட்டா தம்பதியர் திக்கு முக்காடிப் போகினர். வாக்கு சேகரிக்க வந்த இடத்தில் வீட்டிற்குள் வந்து டீ தயாரித்து கொடுத்த குஷ்புவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அங்கிருந்தவர்களிடம் தனக்கு வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக்கொண்டார்.

குஷ்பு கடந்து வந்த அரசியல் பாதை:

2010-ம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு, ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று முடிவு செய்துவிட வேண்டாம் என பேசியது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சோனியா, ராகுல் முன்னிலையில் காங்கிரசில் ஐக்கியமானார். தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த குஷ்பு, அப்போதைய மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். இளங்கோவன் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு குஷ்புவின் மவுசும் காங்கிரசில் குறையத் தொடங்கியது.

குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தமக்கு அழைப்பு விடப்படுவதில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய குஷ்பு, ராகுலுக்கு பதில் சச்சின் பைலட் அல்லது ஜோதிராதித்ய சிந்தியாவை தேசிய தலைவர் ஆக்கலாம் எனக் கூறி தலைமையின் வெறுப்புக்கு ஆளானார். அத்துடன் பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக், புதிய கல்விகொள்கை போன்றவற்றிற்கு ஆதரவும் தெரிவித்து சொந்த கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். காங்கிரசில் இனி குஷ்பு இருக்கமாட்டார் என பரவலாக பேசப்பட்ட போது, அதனை தொடர்ந்து மறுத்து வந்தவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

First published:

Tags: BJP, Kushboo, TN Assembly Election 2021