முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உடல்நலக்குறைவால் உயிரிழந்த சகோதரி.. கதறி அழுத துர்கா ஸ்டாலின்!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சகோதரி.. கதறி அழுத துர்கா ஸ்டாலின்!

துர்கா ஸ்டாலின் சகோதரி சாருமதி

துர்கா ஸ்டாலின் சகோதரி சாருமதி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி காலமானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் மூத்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என 2 சகோதரிகளும், ராஜமூர்த்தி என ஒரு சகோதரரும் உள்ளனர். இதில் சாருமதி சென்னையில் வசித்து வந்தார். துர்கா ஸ்டாலினுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வார். அவ்வாறு செல்லும் போதும், தனது இரண்டு சகோதரிகளில் ஒருவரை அழைத்து செல்வாராம். உடன் பிறந்தவர்கள் மீது துர்கா ஸ்டாலின் எப்போதும் பாசமாக இருப்பார். இந்தநிலையில், சாருமதி மறைவு அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், சாருமதி உடலுக்கு இன்று மாலை சென்னையில் இறுதி சடங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள சாருமதியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகினர்.

First published:

Tags: Chennai, Durga Stalin, MK Stalin, Tamilnadu