• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டாலின் உடன் டெல்லி பயணம் செய்த துர்கா ஸ்டாலின்.. என்ன காரணம்?

ஸ்டாலின் உடன் டெல்லி பயணம் செய்த துர்கா ஸ்டாலின்.. என்ன காரணம்?

முக ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின்

முக ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின்

முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ள ஸ்டாலின் உடன் அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்து தேவைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதங்களை எழுதி வந்தார். அத்துடன், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கவுள்ளார்.

    Also Read : மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என்று நம்புகிறேன் - செல்லூர் ராஜூ

    டெல்லி சென்ற ஸ்டாலின் உடன்அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர். டெல்லியில் சென்று இறங்கிய முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து நேராக டெல்லி ஓடிஐஎஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை சென்று பார்வையிட்டார்.

    இதனிடையே முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் அவர் உடல்நிலை சரிவர கவனிக்காமல் உள்ளார். கொரோனா தொற்று காலத்தில் ஸ்டாலின் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மிகவும் கவனமாக உள்ளார். இதனால் சரியான நேரத்திற்கு சாப்பாடு மற்றும் மருந்து, மாத்திரைகளை அவர் எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காவே அவருடன் துர்கா ஸ்டாலினும் பயணம் செய்துள்ளதாக திமுக தரப்பில் உள்ளவர்கள தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: