‘முதல்வர் ஸ்டாலின் ஹெல்தில் தனிகவனம்’ - கனிமொழி இல்லத்தில் துர்கா ஸ்டாலின் தயார் செய்த உணவுகள்

மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.கஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 • Share this:
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சுற்றுப்பயணம் கவனம் பெற்றுள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார்.

  கொரோனா சூழல் காரணமாக டெல்லிக்கு உடனடியாக செல்ல முடியாத சூழலில் பிரதமர் நேற்று மாலை ஜூன் 17-ம் தேதி அப்பாய்ட்மெண்ட் கொடுத்த நிலையில் டெல்லிக்கு புறப்பட்டார். இந்த பயணத்தின்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றார். தனி விமானம் மூலம் டெல்லி சென்ற ஸ்டாலினை, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

  Also Read: சோனியா, ராகுலுடன் சந்திப்பு: சிந்துவெளி முதல் வைகை வரை புத்தகத்தை பரிசளித்த ஸ்டாலின்!

  நேற்று பிரதமரை சந்தித்து பேசிய ஸ்டாலின் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இன்று காலை முதமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். டெல்லியின் அக்பர் இல்லத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழக முதல்வர் மு.கஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் அவர் உடல்நிலை சரிவர கவனிக்காமல் உள்ளார். கொரோனா தொற்று காலத்தில் ஸ்டாலின் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மிகவும் கவனமாக உள்ளார். அதனால் சரியான நேரத்திற்கு சாப்பாடு மற்றும் மருந்து, மாத்திரைகளை அவர் எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காவே அவருடன் துர்கா ஸ்டாலினும் பயணம் செய்துள்ளதாக கூறினர்.

  டெல்லி ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் கணவர் ஸ்டாலினுக்கு தேவையான உணவுகளை அங்கே தயார் செய்து தமிழ்நாடு இல்லத்திற்கு கொண்டு வந்து துர்கா ஸ்டாலின் வழங்கியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: