Home /News /tamil-nadu /

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பதி சென்ற  துர்கா ஸ்டாலின், ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.

இதைத் தொடர்ந்து ரங்கநாயக மண்டபத்தில் ஷேசா வஸ்தரத்தை துர்கா ஸ்டாலினிடம் தேவஸ்தான ஊழியர்கள் வழங்கினர்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Tirupathi

அடுத்த செய்தி