சீர்காழியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்- ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு

துர்கா ஸ்டாலின்

சீர்காழி அருகே பூம்புகார் தொகுதி தி.மு.க வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்து துர்கா ஸ்டாலின் கடலோர கிராமங்களில் வாக்கு சேகரித்தார். ஆரத்தி எடுத்து பெண்கள் மகிழ்ந்தனர்.

  • Share this:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக மாவட்ட பொறுப்பாளரான நிவேதா முருகன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்து பூம்புகார் தொகுதி கடலோர மீனவர் கிராமங்களில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாணகிரி மற்றும் பூம்புகார் கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார் மரியாதை செய்து வரவேற்றனர். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு மீனவப் பெண்களுடன் கலந்துரையாடிய துர்கா ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

வானகிரியில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் பூம்புகார் மீனவர்கள் சுறுக்குமடி வலை பயன்படுத்த சட்ட மறுவரைவு செய்யவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற அவர் அதனை மனுவாக கொடுக்கும்படியும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் அவர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றபடும் என உறுதியளித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: