அதிமுக எம்.எல்.ஏ.,வின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த துரைமுருகன்...!

அதிமுக எம்.எல்.ஏ.,வின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த துரைமுருகன்...!
துரைமுருகன்
  • Share this:
சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ., லோகநாதனின் கோரிக்கைக்காக திமுக பொருளாளர் மற்றும் எதிர்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் குரல் கொடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வைத்தியனான் குப்பம் தொகுதியில், அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி துவங்கப்பட வேண்டும் என, அத்தொகுதி அதிமுக உறுப்பினர் லோகநாதன் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வரும் காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

அப்போது பேசிய, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கே.வி.குப்பம், தன்னுடைய முன்னாள் தொகுதி எனவும், அங்குள்ள மாணவிகள், கல்லுாரி படிப்பிற்காக வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது எனவும், அதனால் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி துவங்க நடடவிக்கை எடுக்க வேண்டும். நெகட்டிவாக அமைச்சர் பதிலளிக்க கூடாது. முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


அதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் அன்பழகன், நெகட்டிவாக பதிலளிக்கவில்லை எனவும், வரும்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் தெரிவித்ததாகவும் கூறினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading