• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்சியில் இருப்பவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சிம்மசொப்பனம் - துரைமுருகன் புகழாரம்

ஆட்சியில் இருப்பவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சிம்மசொப்பனம் - துரைமுருகன் புகழாரம்

துரைமுருகன்

துரைமுருகன்

ஆட்சியில் இருப்பவர்களுக்கு மு.க.ஸ்டாலின் சிம்மசொப்பனமாக இருப்பதாக தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் துரைமுருகன், மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டைப் பார்த்து நான் மலைத்துப் போகிறேன். மு.க.ஸ்டாலினைப் பார்த்து அண்ணா ஒரு நாள் சொன்னார், நீ அப்பனையே மிஞ்சிய விடுவாய் என்று. அவர் சொன்ன கூற்று இன்று சரியாகிவிட்டது. கருணாநிதி இல்லாமல் இந்த இயக்கத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். எந்தக் கட்சியாவது நிர்வாகிகளுடன் தலைவர்கள் தொலைபேசியில் பேசியது உண்டா? காணொளி மூலம் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்தார்.

    அதிமுகவின் ஊழலை சட்டமன்றத்தில், ஊடகங்கள், ஏடுகளில் எழுதி சுட்டிக்காட்டும் ஆண்மை உள்ள தலைவனாக ஸ்டாலின் விளங்குகிறார். வருங்காலத்தில் ஸ்டாலின் மீண்டும் வியூகம் வகுக்க வேண்டும். இந்த ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. எம்.ஜி.ஆரையே நாடாளுமன்றத்தில் சீரோ வாங்க வைத்த இயக்கம் திமுக. ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற
    மன்னாதி மன்னர்களையும் தூளாக்கியவன் திமுககாரன். நாம் அனைவரிடம் இருக்க வேண்டியது ஒற்றுமை.

    Also read: வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து அமைச்சர்களையும் தோற்கடிக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் சூளுரை

    கட்சியில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒன்றே லட்சியம். ஸ்டாலின் கோட்டைக்குச் செல்லவேண்டும். என்னைவிட வயதில் இளையவர். இருப்பினும் ஸ்டாலினைப் பார்த்து தலைவா என்று கையெடுத்துக் கூப்பிடுகிறேன். ஒற்றுமையே தம்முடைய வெற்றி என்று நில்லுங்கள். ஆட்சியில் இருப்பவர்களுக்கு சிம்மசொப்பனமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

    தமிழகம் முழுவதும் வருகின்ற 23-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை திமுக சார்பில் 16,000 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று கலந்துரையாடல் நடத்துகிறார். இந்த கூட்டத்தில், கட்சியின் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில், அதிமுகவின் ஊழல்களை எடுத்துரைக்க உள்ளனர்.

    கொரானா என்ற கொடிய நோயால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. அனைத்தும் ஸ்தம்பித்துவிட்டது. எம்ஜிஆர் தான் எடப்பாடியா, ஜெயலலிதா தான் ஓபிஎஸ்ஸா? இவர்களெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூச்சுக்குகூட தாங்க முடியாத துரோகிகள் என்று காட்டமாக தெரிவித்தார்.

    கண்ணொளி மூலம் ஸ்டாலின் பேசியதாவது, நிர்வாக திறனற்ற அதிமுக அரசாங்கத்தால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரம், முதல் கிராம் வரை திகழ்ந்து விட்டது.
    அதிமுகவை நிராகரிப்போம் என்ற குற்றப்பத்திரிகை உடன் கிராம சபை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    புதிய விடியலை நோக்கி ஒன்றாக பயணிப்போம்’ என்று தெரிவித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: