‘தமிழ்நாடு தாண்டினா எல்லாரும் நண்பர்கள்தான்’ - டெல்லியில் துரைமுருகன், எல்.முருகன் எதிர்பாரா சந்திப்பு!

துரைமுருகன் - எல்.முருகன் சந்திப்பு

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து விட்டு சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் திரும்பினார். அப்போது, அதே தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர் காந்தி ஆகியோரும் துரைமுருகனும் எதிர்பாராத விதமாக சந்தித்து கொண்டனர்

  • Last Updated :
  • Share this:
    டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்களை எதிர்பாராத விதமாக சந்தித்தார்.

    தமிழக அரசியலில் தனது கிண்டலான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.  திமுகவினர் மட்டுமல்லாது மாற்றுக் கட்சியினரும் அவரது பேச்சை ரசித்து கேட்பதுண்டு. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக அவர் டெல்லி சென்றுள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர்  கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த துரைமுருகன்,  மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம், தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து விட்டு சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் திரும்பினார். அப்போது, அதே தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர் காந்தி ஆகியோரும் துரைமுருகனும் எதிர்பாராத விதமாக சந்தித்து கொண்டனர்.



    அப்போது, எல்.முருகன் "அய்யா வணக்கம் நல்லா இருக்கீங்களா?" என துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் உங்களுடைய நண்பர்கள் வந்திருக்காங்க என கேலியாக  கூற அதற்கு துரைமுருகன் "தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் நண்பர்கள் தான்" என்று  கூறி அங்கிருந்தவர்களை தனது பேச்சால் சிரிக்க வைத்தார்.
    Published by:Murugesh M
    First published: